முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலமும் வளமும் வழங்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பவுர்ணமியை ஒட்டி கொண்டாடப்படும் பண்டிகைகளில் முருகப் பெருமானுக்கு உரிய பண்டிகையாக தைப்பூசம் உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழர்களாலும் நேற்று தைப்பூசம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முருகன் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெற்ற விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்!
முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும் செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று கூறியுள்ளார்.