டெல்லியில் பாஜக - ஆம் ஆத்மி வாக்கு சதவீத வித்தியாசம் 1.99% மட்டுமே!


புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ல் அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கும், தோல்வியடைந்த ஆம் ஆத்மிக்கும் இடையிலான வாக்குகள் வித்தியாசம் வெறும் 1.99 சதவி​கிதம் மட்டுமே.

இந்தத் தேர்தலில் பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மி 43.57 சதவீத வாக்​குகளை பெற்றன. இவற்றுக்​கு இடையேயான வித்​தி​யாசம் வெறும் 1.99 சதவி​கிதம் மட்டுமே. காங்கிரஸ் கட்சி 6.34 சதவீத வாக்​குகளை பெற்றுள்​ளது. இது கடந்த 2020 தேர்​தலில் பெற்றதை விட 2 சதவி​கிதம் அதிகம். 10-க்கும் மேற்​பட்ட தொகு​தி​களில் காங்​கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி கட்சி​யின் வெற்றிக்கு தடையாக இருந்துள்ளது.

2025 டெல்லி பேரவைத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றிருக்கும் பாஜக, 27 ஆண்டுகளுக்கு பின்பு அரியணையைக் கைப்பற்றி இருக்கிறது. மறுபுறம் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, வாக்கு சதவீதம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையில் கணிசமான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் தனது வாக்கு விகிதத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை இழந்துள்ளது. அதாவது, கடந்த 2020 பேரவைத் தேர்தலில் 53.57 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம், இந்த 2025 தேர்தலில் 43.55 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சரிவு ஆம் ஆத்மி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் எதிரொலித்துள்ளது.

பாஜகவின் வாக்கு சதவீதம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 தேர்தலில் 38.51 சதவீதம் பெற்றிருந்த பாஜக, இந்த 2025 தேர்தலில் 45.76 சதவீதம் பெற்றுள்ளது. இந்த ஏற்றம் பாரதிய ஜனதா கட்சிக்கு 48 இடங்களை கைப்பற்றவும், ஆட்சி அமைக்கவும் வழிவகுத்துள்ளது.

ஆம் ஆத்மிக்கு அதிகமான இழப்பு டெல்​லி​யின் மூன்று தொகு​தி​களில் ஏற்பட்​டுள்​ளது. புதுடெல்​லி​யில் கேஜ்ரிவால், ஜங்புரா​வில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் கிரேட்டர் கைலாஷில் மாநில அமைச்​சர் சவுரவ் பரத்​வாஜ் ஆகியோர் காங்​கிரஸால் தோல்​வியை சந்தித்​தனர். இந்த மூன்​றின் வெற்றி வித்​தி​யாசத்தை விட, காங்​கிரஸ் அதிகமான வாக்​குகளை பெற்றிருந்​தது.

கால்​காஜி​யில் முதல்வர் ஆதிஷி 3,521 வாக்​கு​களில் பாஜகவின் ​முதல்​வர் வேட்​பாளர்​களில் ஒரு​வரான ரமேஷ் பிதூரியை வென்​றுள்​ளார். இங்கு ​காங்​கிரஸின் அல்கா லம்​பாவுக்கு கிடைத்த 4,342 வாக்​குகளை விட சிறிது கூடு​தலாகப் பெற்றிருந்தால் ஆ​திஷி​யும் தோல்​வி பெற்​றிருப்​பார்​.

x