டெல்லி தேர்தலை முன்னிட்டு புதிய பிரச்சார பாடலை வெளியிட்டது பாஜக


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதிய பிரச்சார பாடலை பாஜக வெளியிட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், பாஜகவின் 4-வது பிரச்சார பாடலை அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவாரி நேற்று வெளியிட்டார். ‘தில் வாலோ கி தில்லி கோ ஆப் பிஜேபி சர்க்கார் சஹியே’ என்ற அந்தப் பாடலை முன்னாள் எம்.பி.யும் போஜ்புரி பாடகருமான தினேஷ் லால் யாதவ் பாடி உள்ளார். இந்தப் பாடலின் படைப்பு இயக்குநர் பாஜக மூத்த தலைவர் நீல் காந்த் பக்சி.

இதுகுறித்து மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டபோது, இவற்றை எப்படி நிறைவேற்றுவார்கள் என சிலர் கேள்வி எழுப்பினர். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், பாஜக ஆளும் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

x