ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை: மத்திய பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு


புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி கிடையாது. மேலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாத வருமானமாக ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

2023ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு இப்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல வீட்டு வாடகை டிடிஎஸ் வருடாந்திர வரம்பை ரூ.2.40 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரி பிடித்தம் இல்லை என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

x