மணிப்பூரின் சூரசந்த்பூரில் ராக்கெட் லாஞ்ச்சர் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மணிப்பூர் மாநில போலீஸார் நேற்று கூறியதாவது: சூரசந்த்பூர் மாவட்டம் ஹெங்லெப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோய்லாம்கோட் மற்றும் நலோன் பகுதியில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, 6 ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஒரு மார்டர், ஒரு 7.62 எம்எம் ஸ்நைப்பர் ரவுண்டு மற்றும் ஸ்நைப்பர் மேகசைன் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் தடை செய்யப்பட்ட கேசிபி (பிடபிள்யுஜி) அமைப்பைச் சேர்ந்த 2 பேர் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மொரோக் இங்கோல் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது. இவர்களிடமிருந்து 9 எம்எம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாற் போலீஸார் தெரிவித்தனர்.