காதலனை கொன்ற கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை அறிவிப்பு


திருவனந்தபுரம்: கன்னி​யாகுமரி​யில் வசித்த கேரள பெண் கிரீஷ்மா. இவர் கல்லூரி​யில் படிக்​கும் ​போது திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற வாலிபரை காதலித்​து வந்தார். இந்நிலை​யில் கிரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திரு​மணம் நிச்​சய​மானது.

காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்​டிக்க விரும்பிய கிரீஷ்மா, அவரை கொலை செய்​வது​தான் பிரச்​சினையி​லிருந்து விடு​படு​வதற்கு ஒரே தீர்வு என முடிவு செய்​தார். அவருக்கு குளிர்​பானத்​தில் வலி நிவாரண மாத்​திரை, தூக்க மாத்​திரைகளை கலந்து கொடுத்​தும் பலன் அளிக்க​வில்லை. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஷரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் கொடுத்​தார்.

அதை குடித்த ஷரோன் ராஜின் உடல் உறுப்புகள் செயல் இழந்​து இறந்​தார். போலீஸ் விசா​ரணை​யில் கொலை குற்​றத்தை ஒப்புக் கொண்ட கிரீஷ்மா ஓராண்டு சிறை தண்டனை அனுப​வித்து ஜாமீனில் வெளிவந்​தார். கேரளா​வின் நெய்​யா​ற்றின்கரை
நீதி​மன்​றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்​கில் கடந்த வெள்​ளிக்​கிழமை தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. அதில் கிரீஷ்மாவை குற்​றவாளி என நீதிபதி அறிவித்​தார்.

இதனிடையே இன்று குற்றவாளி கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

x