ஆந்திர மாநிலத்தில் கடலில்​ மூழ்​கி 3 பேர்​ உயிரிழப்பு​


சித்தரிப்புப் படம்

ஒங்​கோல்​: ஆந்​திரா​வின்​ பிர​காசம்​ ​மாவட்​டம்​, சிவண்​ண பாளை​யத்​தை சேர்ந்​த 6 பேர்​ சிங்​க​ராய ​கொண்​டா மண்​டலம்​, பா​காலா கடற்​கரை​யில்​ நேற்று குளிக்​கச்சென்​றனர்​.​ கடலில் குளித்தபோது அவர்கள் 6 பேரும்​ ​ராட்​சத அலை​யால்​ இழுத்​துச் செல்​லப்​பட்டனர்​.

சம்​பவ இடத்​துக்​கு ​விரைந்​து வந்​த ​போலீ​ஸாரும்​, தீயணைப்பு​ படை​யினரும்​ கடலில்​ மூழ்​கிய​வர்​களை தேடும்​ பணி​யில்​ ஈடு​பட்​டனர்​. இதில் மாதவா (25), ஜென்​சி​கா (15), ​யாமினி (16) ஆகியோர்​ சடல​மாக மீட்​கப்​பட்​டனர்​. மீத​முள்​ள 3 பேரை தேடும்​ பணி தீ​விரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.சம்​பவ இடத்​துக்​கு அமைச்​சர்​ பால வீராஞ்​சநேய சுவாமி சென்று உயி​ரிழந்​தவர்​களின்​ குடும்பத்​தினருக்​கு ஆறு​தல்​ கூறினார்​.

x