தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
கடந்த ஜனவரி 7ம் தேதி அரசு வாகனத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக டெல்லி முதல்வர் அதிஷிக்கு எதிராக தேர்தல் நடத்தும் அதிகாரி முதலில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக டெல்லி முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து கோவிந்த் புரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் கல்காஜியிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, "மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக அரசு வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தேர்தலின் போது பிரசாரம் தொடர்பான பயணங்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.