ஹெச்எம்பிவி வைரஸ் சாதாரண சளி, இருமலையே ஏற்படுத்தும்: சவுமியா சுவாமிநாதன் தகவல்


ராமேசுவரம்: ஹெச்எம்பிவி வைரஸ் சாதாரணமாக சளி, இருமல் போன்றவை ஏற்படுத்தக்கூடியது, கரோனாவையும் இதையும் ஒப்பிடக்கூடாது என தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகரான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரத்தில் பேசிய சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது, “சீனாவில்கூட ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு அதிகளவில் இல்லை. கரோனாவையும் இதையும் ஒப்பிடக்கூடாது. ஹெச்எம்பிவி வைரஸ் சாதாரணமாக சளி, இருமல் போன்றவை ஏற்படுத்தக்கூடியது.

குளிர்காலத்தில் வரக்கூடிய இருமல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் துளசி, இஞ்சி எடுத்துக் கொள்ளலாம். மாஸ்க் அணிந்து கொள்ளலாம். கைகளை நன்கு கழுவ வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

x