கிஸ்த்வர்: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேரை காணவில்லை.
ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள படார் பகுதியில் நேற்று சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். டிரைவர் மற்றும் பயணி ஒருவரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த விபத்துக்கு காஷ்மீரின் உதம்பூர் எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.