பிபிஎஸ்சி தேர்வு ரத்து கோரி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதம்: 2 நாட்களுக்கு பின் தீவிர போராட்டம்


பிஹார் அரசு பணியாளர் தேர்வை (பிபிஎஸ்சி) ரத்து செய்யக் கோரி ஜன் சூரஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்தார்.

பிஹார் அரசு பணியாளர் தேர்வு கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில் கேள்வித் தாள் வெளியிடப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கண்டித்து பிபிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் பாட்னாவில் உள்ள காந்தி மைதானம் அருகே கடந்த 2 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிஹார் தலைமை செயலாளர் அம்ரித் லால் மீனாவை நேற்று சந்தித்து மனு அளித்தனர். பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக் கோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று காந்தி மைதானம் வந்த ஜன் சூரஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ பிபிஎஸ்சி தேர்வை பிஹார் அரசு ரத்து செய்துவிட்டு புதிய தேர்வை நடத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக நான் சாகும் வரை உண்ணாவிரத போாரட்டத்தை தொடங்கியுள்ளேன். நான் 2 நாட்கள் காத்திருப்பேன். நிதிஷ் குமார் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நான் போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்.

x