திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024ம் ஆண்டில் ரூ.1,365 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் ஏழுமலையானை 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.1,365 கோடி உண்டியல் மூலம் மட்டுமே பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசித்து வருகின்றனர். வார கடைசி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இன்னும் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.