மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். நாளை டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை ராஜ்காட் அருகே மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.