கேரள, பிஹார் மாநில ஆளுநர்கள் மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு


புதுடெல்லி: கேரள, பிஹார் மாநில ஆளுநர் களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள மாநில ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான், பிஹார் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பிஹார் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை, கேரள மாநில ஆளுநராக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மிசோரம் மாநில ஆளுநராக, ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் விஜய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக இருந்த ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒடிசா மாநில ஆளுநராக டாக்டர் ஹரிபாபு கம்பம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மணிப்பூர் மாநில ஆளுநராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

x