அமித்ஷா விவகாரத்தில் தொடர் அமளி - மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!


புதுடெல்லி: மக்களவை இன்று காலை கூடிய உடனேயே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், பாஜக எம்.பி-க்களும் வேறு ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடினர்.

இந்த சூழலில் காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை தொடங்க இருந்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். இதனையடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகக் கூறி சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

x