ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் உயிரிழப்பு: 2 வீரர்கள் காயம்


ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள கடர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் புதன்கிழமை இரவு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் ஹிஸ்புல் கமாண்டர் நலி என்கிற பரூக் அகமது பட்டும் ஒருவர். தெற்கு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் இவருக்கு தொடர்புள்ளது. மற்ற தீவிரவாதிகள் இர்பான் லோனே, அடில் உசைன், முஷ்தாக் இட்டூ, யாசிர் ஜாவைத் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள்.

x