பதற்றம்: ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்


புதுடெல்லி: ரிசர்வ் வங்கிக்கு இன்று டிசம்பர் 13ம் தேதி ரஷ்ய மொழியில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் இது இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் சம்பவம். இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மின்னஞ்சல் கடிதத்தில், ரிசர்வ் வங்கியின் மும்பை வளாகத்தை வெடிகுண்டுகளால் வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக மாதா ரமா பாய் மார்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தலைசிறந்த ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஒரு மாத காலத்தில் விடுக்கப்பட்டுள்ள இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

x