துணை முதல்வராக சம்மதித்தார் ஏக்நாத் ஷிண்டே? - அஜித் பவாரும் பதவியேற்கிறார்!


சென்னை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவிறே்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்கிறார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் பாஜக 132 இடங்களும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களும், அஜித்பவார் என்சிபி 41 இடங்களும் பெற்றன. நவம்பர் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அம்மாநில முதல்வர் தேர்வு குறித்த இழுபறி நீடித்தது.

இந்த சூழலில், அக்கூட்டணி சார்பில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, புதிய அமைச்சரவையில் துணை முதல்வராவாரா என்ற கேள்வி நீடித்தது. இந்த சூழலில், ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைனாத்தில் மாலை 5.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இன்று முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளார்கள். அவர்களுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

x