தெலங்கானா என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?


ஹைதராபாத்: தெலங்​கானா​வின் முலுகு மாவட்​டத்​தில் உள்ளது எதுருநகரம். இங்கு பழங்​குடி​யினர் இருவரை மாவோ​யிஸ்ட்கள் நேற்று பிடித்​துச் சென்​றனர். அவர்களை போலீ​ஸாருக்கு தகவல் அளிப்​பவர்கள் என குற்​றம்​சாட்டி மாவோ​யிஸ்ட்கள் தூக்​கி​லிட்டு கொன்​றனர்.

இதையடுத்து அங்கு மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியில் ஈடுபட்​டுள்ள தெலங்​கானா க்ரேஹவுண்ட்ஸ் கமாண்​டோக்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்​டை​யில் ஈடுபட்​டனர். அப்போது மாவோ​யிஸ்ட்​களுக்​கும், கமாண்​டோக்​களுக்​கும் இடையே துப்​பாக்கி சண்டை நடந்​தது. இதில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​திகள் 7 பேர் உயிரிழந்​தனர்.

இவர்​களில் குர்சம் மாங்கு என்ற பத்ரு என்பவர் தெலங்​கானா மாவோ​யிஸ்ட் கமிட்டி செயலா​ளர். மல்லையா என்பவர் டிவிஷனல் கமிட்டி உறுப்​பினர். முசாக்கி தேவல் மற்றும் ஜமுனா ஆகியோர் ஏரியா கமிட்டி உறுப்​பினர்​கள். ஜெய்​சிங், கிஷோர் மற்றும் காமேஷ் ஆகியோர் மாவோ​யிஸ்ட் உறுப்​பினர்​கள். என்க​வுன்ட்டர் நடைபெற்ற இடத்​தில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்​பாக்​கிகளை க​மாண்​டோக்​கள் மீட்​டனர்​.

x