வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா இன்று காலை கேரளத்தின் பாரம்பரிய சேலை அணிந்தபடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.
கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் பிரியங்கா காந்தி முதலில் எழுப்பும் குரல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மட்டுமல்லாமல் வயநாடு வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.