பதவி விலகினார் ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிரா புதிய முதல்வர் பற்றி பாஜக மேலிடம் ஆலோசனை


மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று வழங்கினார். முன்னதாக ஆளுநருக்கு பூங்கொத்து கொடுக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார்.படம்: பிடிஐ

மும்பை: ம​காராஷ்டிரா​வில் 288 சட்டப்​பேரவை தொகு​திகள் உள்ளன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்நிலை​யில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற தேர்​தலில் பாஜக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்​பற்றியது. இதில் பாஜக 149 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 132 தொகு​தி​களைக் கைப்பற்றியது, சிவசேனா 57, தேசி​யவாத காங்​கிரஸ் (அஜித்) 41 இடங்​களி​லும் வெற்றியை பதிவு செய்தன.

சிவசேனா (உத்​தவ்), சரத் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ், காங்​கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவி​காஸ் அகாடி கூட்டணி ஒட்டுமொத்​தமாக 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்​வியை சந்தித்​தது. வெற்றியை தொடர்ந்து மகாராஷ்டிர பாஜக​வின் முகமாக இருக்​கும் தேவேந்திர பட்னா​விஸ் முதல்வர் பதவியை ஏற்பார் என்றும், சிவசேனா மற்றும் தேசி​யவாத காங்​கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்வர் வழங்​கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்​கின்றன. ஆனால் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி​யில் நீடிக்க வேண்​டும் என்று சிவசேனா கட்சி​யின் மூத்த தலைவர்கள் விரும்​பு​கின்​றனர்.

இந்நிலை​யில், நேற்று முன்​தினம், தேவேந்திர பட்னா​விஸ் டெல்​லிக்​குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்​டோருடன் ஆலோசனை நடத்​தி​யுள்​ளார். பின்னர் அவர் நேற்று காலை மும்பை திரும்​பினார். இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்​வர்கள் தேவேந்திர பட்னா​விஸ், அஜித் பவார் உள்ளிடோர் மும்​பை​யில் உள்ள ராஜ்பவனில் மாநில ஆளுநர் சி.பி.ரா​தாகிருஷ்ணனை நேரில் சந்தித்​தனர். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்​வ​தாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம், ஷிண்டே வழங்​கினார்.

இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவி​யேற்கும் வரை காபந்து முதல்​வராக நீடிக்​கு​மாறு ஷிண்​டேவை, ஆளுநர் கேட்டுக் கொண்​டார். அதிக இடங்​களில் வெற்றி, பட்னா​விஸுக்கு பெரு​கும் ஆதரவு போன்ற காரணங்​களால் அவருக்கே முதல்வர் பதவி வழங்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுதொடர்பாக ம​கா​யுதி கூட்​ட​ணித் தலை​வர்​களு​டன் பாஜக மேலிடம் ஆலோசனை நடத்துகிறது.

x