முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!


மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நத் ஷிண்டே இன்று தனது பதவியை ராஜினமா செய்தார்.

இன்று காலை ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமையும் வரை ஷிண்டே காபந்து முதல்வராக தொடர்வார் எனத் தெரிகிறது.

ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ள போதிலும் அடுத்த முதல்வர் பற்றி வெளிப்படையான அறிவிப்புகள் ஏதும் இதுவரையில் பாஜக தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

x