பாட்னா: முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பிஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிஹாரி சமூகத்தினர் மத்தியில் பிரசாந்த் கிஷோர் நேற்று காணொலி வாயிலாக பேசியதாவது: சூடானில் யாரை சுட்டுக் கொல்வது, எந்த இடத்தை கைப்பற்றுவது என்ற கவலையில் உள்ளனர். பிஹாரிலும் அதே நிலைமைதான் உள்ளது. பிஹார் மிகவும் மோசமான நிலையில் உள்ள தோல்வியடைந்த மாநிலம் என்பதை நாம் உணர வேண்டும். பிஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிப்போம். இதற்கான நிதியை மதுவிலக்கை நீக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து பெறுவோம் என்றார்.