ஜார்க்கண்டில் ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி?


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, பல்கலைழக்கழகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ரேஷனில் ஒரு நபருக்கு மாதந்தோறும் 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதோடு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்களே ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

x