லஞ்ச புகார் எதிரொலி: அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவு


அதானி மீதான ரூ.2,100 கோடி லஞ்ச புகாரைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்து 20 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் வழங்கி திட்டத்தில் பங்கு பெற்றதாக கௌதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதால் அதானி குழுமம் புதுப்பிக்கப்பட்ட ஆய்வை எதிர்கொள்கிறது.

அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் கெளதம் அதானி மீது 250 மில்லியன் டாலர்கள் லஞ்சக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததை அடுத்து இன்றைய காலை நேர பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை தொடக்க வர்த்தகத்தில் 20 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்தன.

கடந்த 2023ல் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை அதானி குழுமத்திற்கு ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதானி குழும பங்குகள் மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x