புதுடெல்லி: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தது மற்றும் வாக்களிக்க விடாமல் தடுத்தது தொடர்பான புகாரின் பேரில் இரண்டு காவலர்களை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு போலீஸார் இடையூறு விளைவிக்கும் வீடியோக்களை பதிவிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இந்த புகார்களை சரிபார்த்து, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு போலீஸாரை சஸ்பெண்ட் செய்தனர்.
காஜியாபாத், கதேஹாரி, கெய்ர், குந்தர்கி, கர்ஹால், மஜவான், மீராபூர், புல்பூர் மற்றும் சிசாமாவ் ஆகிய ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் சில சமூகங்கள் வாக்களிக்க தடை விதிக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை கவனத்தில் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வாக்குப்பதிவை உறுதி செய்ய உத்தரபிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அனைத்து புகார்களையும் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும், சமூக ஊடகங்களில் டேக் செய்வதன் மூலம் இதுபற்றிய புகார்களை தெரிவிக்குமாறும் கூறப்பட்டது. இதனையடுத்து வழிகாட்டுதல்களை மீறியதற்காக சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண் குமார் சிங் மற்றும் ராகேஷ் நாடார் ஆகியோரை கான்பூர் நகர் காவல் ஆணையரகம் இடைநீக்கம் செய்தது.
முன்னதாக அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வாக்காளர் அட்டைகள் மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை சரிபார்க்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் இந்த வீடியோவின் அடிப்படையில் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். ஆதார் அடையாள அட்டைகளையோ, அடையாள அட்டைகளையோ சரிபார்க்க போலீசாருக்கு உரிமை இல்லை” என்றார்
அகிலேஷ் யாதவின் புகார்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட பிறகு அவர், “தேர்தல் ஆணையமும் உஷாராகிவிட்டது. இப்போது வாக்களிக்க விடாமல் நிறுத்தப்பட்டவர்கள் மீண்டும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்கிறது. இப்போது எந்த முறைகேடும் அனுமதிக்கப்படாது. யாராவது உங்களை மீண்டும் தடுத்தால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் அல்லது அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிவிக்கவும் அல்லது நேரடியாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யவும். தேர்தல் ஆணையத்தின் இந்த உறுதிக்கு நன்றி" என்றார்
अगर निर्वाचन आयोग का कोई जीता-जागता अस्तित्व है तो वो जीवंत होकर, प्रशासन के द्वारा वोटिंग को हतोत्साहित करने के लिए तुरंत सुनिश्चित करे:
— Akhilesh Yadav (@yadavakhilesh) November 20, 2024
- लोगों की आईडी पुलिस चेक न करे।
- रास्ते बंद न किये जाएं।
- वोटर्स के आईडी ज़ब्त न किये जाएं।
- असली आईडी को नक़ली आईडी बताकर जेल… pic.twitter.com/4Qddtlgc19