புதுடெல்லி: டெல்லி மற்றும் லக்னோ உள்ளிட்ட வட இந்தியாவின் முக்கிய நகரங்கள் மோசமான காற்று மாசுபாட்டில் சிக்கி மூச்சுத் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அய்ஸ்வால், காங்டாக், ஷில்லாங் உள்ளிட்ட 9 இந்திய நகரங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கின்றன.
அய்ஸ்வால், கேங்டாக் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் காற்று தரக் குறியீடு சிறப்பான இடத்தில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. .
அய்ஸ்வாலில் காற்றின் தரக்குறியீடு இன்று "நல்ல" பிரிவின் கீழ் 26 ஆக உள்ளது. அதுபோல கேங்டாக் நகரின் காற்றின் தரக்குறியீடு 35 ஆகவும், ஷில்லாங்கின் தரக்குறியீடு 36 ஆகவும் உள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி நவம்பர் 20 அன்று இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் இதோ:
1) அய்ஸ்வால் (மிசோரம்)- காற்றின் தரக்குறியீடு 26 (நல்லது)
2) காங்டாக் (சிக்கிம்) - காற்றின் தரக்குறியீடு 35 (நல்லது)
3) ஷில்லாங் (மேகாலயா) - காற்றின் தரக்குறியீடு 36 (நல்லது)
4) கவுகாத்தி (அசாம்) - காற்றின் தரக்குறியீடு 40 (நல்லது)
5) சாமராஜநகர் (கர்நாடகா) - காற்றின் தரக்குறியீடு 41 (நல்லது)
6) பாகல்கோட் (கர்நாடகா) - காற்றின் தரக்குறியீடு 42 (நல்லது)
7) திருச்சூர் (கேரளா) - காற்றின் தரக்குறியீடு 43 (நல்லது)
8) நஹர்லகுன் (அருணாச்சல பிரதேசம்) - காற்றின் தரக்குறியீடு 51 (திருப்திகரம்)
9) நாகோன் (அசாம்) - காற்றின் தரக்குறியீடு 53 (திருப்திகரம்)
இதற்கிடையில், டெல்லி இன்று நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. டெல்லியின் காற்றின் தரக்குறியீடு "கடுமையான" பிரிவின் கீழ் 422 ஆக உள்ளது. செவ்வாய் கிழமையின் வாசிப்புடன் ஒப்பிடுகையில், இன்றைய காற்றின் தரக்குறியீடு 494ல் இருந்து 422 ஆக குறைந்தது.