மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து: செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸின் 3 பெட்டிகள் தடம் புரண்டன


மேற்கு வங்கம்: ஹவுராவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் அருகே, செகந்திராபாத்-ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸின் (ரயில் எண். 22850) மூன்று பெட்டிகள் இன்று காலை தடம் புரண்டன.

இது குறித்துப் பேசிய தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சார்னா, “இன்று காலை 5:31 மணியளவில், செகந்திராபாத்-ஷாலிமார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ஒரு பார்சல் ரயில் பெட்டியும், இரண்டு பயணிகள் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த விபத்தில் இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.

விபத்து நிவாரண ரயில் மற்றும் சந்த்ராகாச்சி மற்றும் காரக்பூரில் இருந்து மருத்துவ நிவாரண ரயில்கள் உதவிக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. மேலும் கொல்கத்தாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல 10 பேருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

x