வக்பு மசோதா மீதான ஜேபிசி கூட்டத்தில் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணமூல் எம்.பி


புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், வக்பு வாரியஉறுப்பினர்கள் மற்றும் பல்வேறுமாநிலங்களின் சமுதாய பிரதிநிதிகளிடம் ஜேபிசி கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன்படி, ஜேபிசி கூட்டம் பாஜகஎம்.பி.ஜெகதாம்பிகா பால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற நீதிபதிகள்மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்தமசோதா மீது கருத்து தெரிவிக்க அவர்களுக்கு என்ன பங்கு உள்ளது என கேள்வி எழுப்பினர்.

இக்கூட்டத்தின்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி 3 முறை தனது கருத்தைதெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் பேச வாய்ப்பு கேட்டுள்ளார். இதற்குபாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கல்யாண் பானர்ஜிகண்ணாடி தண்ணீர் பாட்டிலைஉடைத்துள்ளார். உடைந்த பாட்டிலை எடுத்து ஜேபிசி தலைவரைநோக்கி வீசி உள்ளார். இதில் கல்யாண் பானர்ஜியின் விரல்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது

x