சண்டீகர்: டெல்லியில் காற்று மாசுபாட்டுக்காக காரணமான வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக ஹரியானா அரசை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்தது. இதனையடுத்து ஹரியானா கைதல் மாவட்டத்தில் 14 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளிர்காலத்தின் தொடக்கத்தில், ஹரியானா மற்றும் பஞ்சாபில் வைக்கோலை எரிப்பது டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு காரணமான வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக ஹரியானா அரசை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்தது. இதனையடுத்து ஹரியானா கைதல் மாவட்டத்தில் 14 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைக்கோல் எரிப்பு சம்பவங்களைத் தடுக்கத் தவறியதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வைக்கோல் எரிப்பு வழக்குகளிலும் விவசாயிகள் கைது செய்யத் தொடங்கியுள்ளதாக ஹரியானா போலீஸார் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டில், கைதல் மாவட்டத்தில் 270 வைக்கோல் எரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 72 விவசாயிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.