மகாராஷ்டிராவில் பதற்றம்: நான்டெட் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


மகாராஷ்டிரா: நான்டெட் பகுதியில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.52 மணியளவில் மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் 19.38 வடக்கு அட்சரேகை மற்றும் 77.46 கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

இந்தியாவின் நில அதிர்வு வரைபடத்தில் நான்டெட் பகுதி மண்டலம் II இல் உள்ளது. இது பூகம்பங்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பு உள்ளது. இந்த நகரம் மகாராஷ்டிராவின் மராத்வாடா பிரிவில் கோதாவரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு செப்டம்பரில், மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது.

x