நவ. 1 - 19 வரை ஏர் இந்தியாவில் பறக்க வேண்டாம்: காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் மிரட்டல்


வாஷிங்டன்:இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுன்(56). நீதிக்கான சீக்கியர்கள்(எஸ்எப்ஜே) என்ற அமைப்பை ஏற்படுத்தி பஞ்சாப்பில் காலிஸ்தான் பகுதியை உருவாக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார்.

பிரிவினைவாதத்தை தூண்டும் இவரை சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக, மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு அறிவித்தது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. சீக்கியர் படுகொலை நினைவு தினம் கடந்தாண்டு அனுசரிக்கப்பட்டபோது, ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பறக்க வேண்டாம் என இவர் மிரட்டல் விடுத்தார். அதேபோல் தற்போதும் சீக்கியர் படுகொலையின் 40-வது நினைவு தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பல விமானங்களுக்கு ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ள நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுன் ஏர் இந்தியா விமானத்துக்கு மிரட்டல் விடுத்துள்ளார்

x