ஹரியானாவில் பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி முதல்வர்கள் கூட்டம்


சண்டிகர்: ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி நேற்று பதவியேற்றார். இந்த விழா முடிந்தபின் தே.ஜ கூட்டணி முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக ஆளும் மாநிலங்களின் 13 முதல்வர்கள் மற்றும் 16 துணை முதல்வர்களும், தே.ஜ கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா, ஆந்திரா, பிஹார், சிக்கிம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இதில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டம் தொடங்கியது. இண்டியா கூட்டணியை எதிர்கொள்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா குறித்தும், அவசரநிலை அமல்படுத்தப்பட்டதன் 50 ஆண்டை அனுசரிப்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் தே.ஜ. கூட்டணி முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

x