மும்பை - டெல்லிக்கு புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


புதுடெல்லி: மும்பையிலிருத்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இண்டிகோ விமானம் மும்பையிலிருந்து 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றது. இதையடுத்த சில நிமிடங்களில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குஇதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு இண்டிகோ விமானத்தை அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

இண்டிகோ 6இ-651 என்ற அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை காலை 8 மணிக்கு அந்த விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது.

விமானங்களுக்கு வெடிகுண்டுமிரட்டல் விடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. புதுடெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆகாஸா ஏர்விமானத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம்மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கே திருப்பிவிடப்பட்டது. அதேபோன்று, கடந்த திங்கள்கிழமை மூன்று சர்வதேச விமானங்களுக்கு மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் 12-வது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

x