இமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்


இமாச்சலப் பிரதேசம்: மண்டியில் இன்று 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மண்டியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் குலுவுக்கும் மண்டிக்கும் இடைப்பட்ட மலைப் பகுதியில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இப்பகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்களின்படி, மண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அட்சரேகை 31.74 மற்றும் தீர்க்கரேகை 76.86 மற்றும் ஐந்து கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ளனர்.

x