மெகபூபா முப்தியின் கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: கலைந்தது ‘கிங் மேக்கர்’ கனவு!


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் அவரின் கிங்மேக்கர் கனவு கலைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மெகபூபா முப்தியின் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பிடிபி கணிசமான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தொங்கு சட்டசபை அமைந்தால், மெகபூபா முப்தி கிங்மேக்கர் ஆவார் என கூறப்பட்டது. தேர்தல் முடிவுக்ளில் வெறும் 3 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றுள்ளதால், அவரின் கனவு கலைந்துள்ளது.

முக்கியமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தோல்வியடைந்துள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் பஷீர் அஹமது ஷா வீரியை விட 9770 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும், தனக்காக பிரச்சாரம் செய்த கட்சியின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இல்திஜா முப்தி கூறினார்.

2014 சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், தற்போது பிடிபி மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ்-நேஷனல் கான்பரன்ஸ் கூட்டணி 50 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

x