புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இயற்கை வளம் மிக்க பகுதி கோவா. அங்குள்ள மக்கள் விருந்தோம்பலுடனும், மதநல்லிணக்கத்துடன் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக பாஜக ஆட்சியின் கீழ் இந்த மதநல்லிணக்கம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாஜக வேண்டும் என்றே மதவாதத்தை தூண்டுகிறது.
கோவாவில் பாஜக.,வின் வியூகம் தெளிவாக உள்ளது. மக்களை பிரிப்பது, சுற்றுச்சூழல் விதிமுறை மீறுவதன் மூலமும் , பசுமை நிலங்கள் சட்டவிரோதமாக மாற்றுவதன் மூலமும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை நாசமாக்குவதான் பாஜக.வின் நோக்கம். இது கோவாவின் இயற்கை மற்றும் சமூக பாரம்பரியம் மீதான தாக்குதல். பாஜக.,வின் இந்த பிரித்தாளும் கொள்கையை கோவா மக்கள் முறியடிப்பர். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.