மகாராஷ்டிரா: அழகான பெண்கள் விவசாயியின் மகனை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஏனெனில் சிறந்த தோற்றமுடைய பெண்கள் நிலையான வேலையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவார்கள் என வருத்-மோர்ஷி தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏவான தேவேந்திர புயர் தெரிவித்தார்.
வருத் தாலுகாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பேசிய தேவேந்திர புயர், “ஒரு பெண் அழகாக இருந்தால், அவர் உன்னையும், என்னையும் போன்ற ஒரு நபரை திருமணம் செய்ய விரும்ப மாட்டார். அந்த பெண் வேலை செய்யும் ஒரு கணவனையே தேர்ந்தெடுப்பார். முதல் இரண்டு வகுப்பு பெண்கள் மளிகைக் கடை அல்லது பான் கியோஸ்க் நடத்தும் ஒருவரை திருமணம் செய்து கொள்வார்கள். மூன்றாம் வகுப்புப் பெண்களே விவசாயியின் மகனை திருமணம் செய்கிறார்கள்” என்றார்
அத்தகைய திருமணத்திலிருந்து பிறக்கும் குழந்தைகள் நல்ல தோற்றம் இல்லாதவர்கள் என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு புயர் ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான யஷோமதி தாக்கூர், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக புயாரை கடுமையாக சாடினார்.