முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!


வெயிலின் தாக்கம்

முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலம், பலோடியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பயங்கரமான வெப்ப அலை வீசியது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரப்பயந்தனர். ஏனெனில், முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலம், பலோடியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நேற்று பதிவானது.

வெப்ப அலை

இதன் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக்கால் பலர் பாதிக்கப்பட்டனர். இதனிடையே ராஜஸ்தானில் இன்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை தொடரும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்சால்மரில் 48.0 டிகிரி செல்சியஸ், பிகானரில் 47.2 டிகிரி செல்சியஸ், சுருவில் 47.0 டிகிரி செல்சியஸ், ஜோத்பூரில் 46.9 டிகிரி செல்சியஸ், வெப்பநிலை பதிவாகியுள்ளது. என்று கூறியுள்ளது.

ராஜஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ராதே ஷியாம் சர்மா கூறுகையில், ராஜஸ்தானில் இந்த கோடை சீசனில் முதல் முறையாக அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்ப அலை

கடந்த 24 மணி நேரத்தில் பலோடியில் 50 டிகிரி செல்சியஸ் பதிவானது. அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான வெப்பம் தொடரும். மே 28 மற்றும் 29 முதல் வெப்பநிலையில் 2-3 டிகிரி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

x