டெல்லி துணைநிலை ஆளுநராக தற்போது பதவி வகிக்கும் வி.கே.சக்சேனா, சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நர்மதா பச்சாவோ அந்தோலன் (என்பிஏ) அமைப்பின் தலைவராகவும், பழங்குயினருக்கான வாழ்வாதார போராட்டங்களுக்காகவும் தேசிய மேதா பட்கர் நன்கறியப்பட்டவர். இவருக்கு எதிராக தற்போது டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அவதூறு வழக்கில் மேதா பட்கர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகி உள்ளது. பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் சர்மா, மேதா பட்கருக்கு எதிரான கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டை உறுதி செய்தார். தொடர்புடைய சட்டத்தின் கீழ், மேதா பட்கருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
மேதா பட்கர் - வி.கே.சக்சேனா இடையே 2000-ம் ஆண்டு முதல் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கரும் வழக்குகளை தொடர்ந்துள்ளார். வி.கே.சக்சேனா அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நேஷனல் கவுன்சில் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்பின் தலைவராக இருந்தார்.
தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், சக்சேனாவுக்கு எதிராக பேசியதோடு, அவதூறு முகாந்திரத்துக்கான கருத்துக்களையும் முன்வைத்திருந்தார். இதனால் கொதிப்படைந்த சக்சேனா, மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மேதா பட்கர் குற்றவாளி தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!
வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!
அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!
ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!