வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி வங்கதேசத்தில் இந்த புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடகிழக்கு பகுதியில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையடுத்து இந்த புயலுக்கு ‘ரெமல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட வங்கக் கடலோரம் உள்ள மாநிலங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதே போல் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும் கன மழை பெய்து வருகிறது. மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் 8 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் வருகிற 26ம் தேதி இந்த தீவிரப் புயல் ரெமல், வங்கதேசத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதை அடுத்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்திற்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரெமல் புயல் கரையைக் கடந்த பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெமல் என்ற இந்த பெயரை, ஓமன் நாடு பரிந்துரைத்துள்ளது. இதற்கு ’மணல்’ என அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!
அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!
சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!
வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!
பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!