குஜராத் மாநிலத்தில் ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே உள்ள வாக்குச் சாவடியில் அந்த வாக்காளர் வாக்களித்ததைத் தொடர்ந்து அங்கு 100 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தேர்தலில் ஒவ்வொரு வாக்குக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கு உதாரணம் தான் இந்த நிகழ்வு. குஜராத் மாநிலம், பனேஜில் ஆழ்ந்த வனப் பகுதியின் உள்ளே வசிப்பவர் மஹந்த் ஹரிதாஸ் உடசீன். சாமியாரான இவர் வாக்குப்பதிவு செய்வதற்காக அவர் வசிக்கும் பகுதியில் ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. ஆபத்தான ஆசிய சிங்கத்தின் கடைசி இயற்கையான வாழ்விடமான கிர் காடு வழியாக இந்த வாக்குச் சாவடிக்கு அதிகாரிகள் சென்றனர்.
இந்நிலையில் வாக்களித்ததும் மஹந்த் ஹரிதாஸ் உடசீன் கூறுகையில், "ஒரு வாக்காளருக்காக 10 பேர் கொண்ட குழு, காட்டில் இங்கு வந்தது என்பது ஒவ்வொரு வாக்குகளும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது” என்றார்.
மேலும் தனது விரலில் அழியா மை வைக்கப்பட்டதையும் புன்னகையுடன் அவர் காண்பித்தார்.
குஜராத்தில் வாக்குப்பதிவு அதிகாரிகளைப் பொறுத்தவரை, சாமியார் மஹந்த் ஹரிதாஸ் உடசீன் வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக செப்பனிடப்படாத கரடு முரடான காட்டு வழியில் நீண்ட பயணம் செய்துள்ளனர்.
40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிட்டத்தட்ட 3 மணி நேர பயணத்துக்குப் பிறகு, தேர்தல் அதிகாரிகள் அங்குள்ள வனத்துறை அலுவலகத்தில் வாக்குச்சாவடியை அமைத்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் வாக்குச்சாவடிக்கு காவி உடை, நெற்றியில் சந்தனம் என பக்தி மயமாக வந்து மஹந்த் ஹரிதாஸ் வாக்களித்தார். வேறு வாக்காளர்கள் இல்லை என்ற போதிலும், தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குச்சாவடி மாலை வரை செயல்பட வேண்டும்.
தற்போது நடைபெறும் 18-வது மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 96.8 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் அதிகபட்சம் 2 கி.மீ. தூரத்துக்கு மிகாமல் பயணித்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!
சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!