கணவனைக் கட்டி வைத்து போதை மருந்து கொடுத்து அவரது ஆணுறுப்பில் சிகரெட், கத்தியால் காயப்படுத்தியதுடன், கொடூரமாக தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னூரைச் சேர்ந்தவர் மனன் ஜைதி. இவருக்கும் மெஹர் ஜஹான் என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கணவரிடம் மெஹர் ஜஹான் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தனிக்குடித்தனம் செல்ல முடியாது என்று ஜைதி உறுதியாக கூறிவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த மெஹர் ஜஹான், தனது கணவன் ஜைதியை அன்றாடம் அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார். இதனால், அவரை கையும், களவுமாக போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று அவரது கணவர் மனன் ஜைதி முடிவு செய்தார். இதற்காக மனைவிக்குத் தெரியாமல், வீட்டின் படுக்கை அறையில் ரகசியமாக கேமராவை பொருத்தினார்.
இந்த நிலையில் மே 5-ம் தேதி தனது கணவர் மனன் ஜைதியின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்ட மெர் ஜஹான், அவர் மீது ஏறி அமர்ந்து குரல்வளையை நெரித்துள்ளார். அத்துடன் சிகரெட்டைக் குடித்து தனது கணவரின் அந்தரங்க உறுப்பில் நெருப்பால் சூடு வைத்துள்ளார். அத்துடன் கத்தியால் கீறி காயமும் ஏற்படுத்தியுள்ளார். இதனால் வலி பொறுக்க முடியாதல் மனன் ஜைதி கதறியுள்ளார்.
ஆனாலும், விடாத மெஹர் ஜஹான், போதைப்பொருளை கணவரின் வாயிக்குள் திணித்து அவரைத் தாக்குகிறார். அத்துடன் கணவரின் வாயில் துணியைக் கட்டி இந்த சித்ரவதையை செய்துள்ளார். இந்த வீடியோவை சியோஹாரா போலீஸில் மனன் ஜைதி ஒப்படைத்தார்.
இதையடுத்து தனது கணவரை கொடூரமாக சித்ரவதை செய்த மெஹ்ர் ஜஹானை போலீஸார் கைது செய்தனர். கணவனைக் கட்டிப்போட்டு மனைவி கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட ஜைதி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!
சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!