பி.எஃப் முன்பணம் இனி எடுக்க முடியாது... ஊழியர்கள் அதிர்ச்சி!


பி.எஃப் அலுவலகம்

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து இனி முன்பணம் பெற முடியாது என்று வெளியாகி இருக்கும் தகவலால் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் மாதம் தோறும் தங்களது சம்பளப் பணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேமித்து வருகின்றனர். இது ஊழியர்களின் ஓய்வு கால வாழ்க்கைக்கான உத்தரவாதமாக அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வைப்பு நிதி தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக தற்போது வரை 2.2 கோடி சந்தாதாரர்கள் பிஎஃப் தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துள்ளனர்.

பி.எஃப் அலுவலகம்

இந்த நிலையில் முன்பணம் எடுக்கும் ஊழியர்கள் இந்த தொகையை தேவையற்ற செலவாக செய்கிறார்கள் என்று கண்டறிந்திருக்கும் வாரியம், தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி பிஎஃப் தொகையிலிருந்து முன்பணத்தை சந்தாதாரர்கள் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

x