கேரளாவில் தாண்டவமாடும் கொரோனா: 3096 பேருக்கு சிகிச்சை!


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3096 ஆக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையடுத்து கேரள அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகக்கவசங்கள் அணிந்து வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு; ஜனவரி 2-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு!

இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்!

x