தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!


மக்களவை தேர்தல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏப்ரல் 26 அன்று கட்டாய விடுமுறை என்று மாவட்ட தேர்தல் அதிகாரி துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு வாக்குப்பதிவு நாட்களும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்க அரசு துணைச் செயலாளர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள்

இந்த நிலையில், வாக்குப்பதிவு அதிகரிப்பு தொடர்பாக ஐ.டி நிறுவனங்களுடன் பிபிஎம்பி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் பிபிஎம்பி கமிஷனரும், பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துஷார் கிரிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியுடன், ஊழியர்களைத் தவறாமல் வாக்களிக்க ஊக்கப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த கூட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளன. வாக்குப்பதிவு தொடர்பாக ஐ.டி நிறுவனங்களுக்கு பிபிஎம்பி மூலம் உத்தரவும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வாக்குப்பதிவு நாளில் நிறுவனங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும். மாநில அரசு ஏற்கெனவே விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 26-ம் தேதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

x