கதுவா: ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கதுவா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) கலந்து கொண்டார்.மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உதவிக்கு ஓடினர். தண்ணீர் குடித்ததும் இயல்பு நிலைக்கு திரும்பிய கார்கே மேடையில் தனது பேச்சை தொடர்ந்தார். விரைவாக அவர் தனது உரையை முடித்துக் கொண்டார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச்செய்தனர்.
அப்போது கார்கே கூறுகையில், ‘‘காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க நாம் போராடுவோம். எனக்கு 83 வயது ஆகிறது. நான் விரைவில் இறக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிரோடு இருப்பேன்’’ என்றார்