பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம்: ஐ.நா. பொது சபையில் அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்


புதுடெல்லி: “பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு அதன் கர்மாவே காரணம்.அந்நாட்டின் தீய செயல்கள் தற்போது அதன் சொந்த சமூகத்தையே அழிக்கின்றன” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த வெள்ளிக்கிழமை ஐநாவின் 79-வது பொதுச் சபைக் கூட்டத்தில் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில்இந்தியா தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் முடிவெடுக் கிறது. பாலஸ்தீனம் போலான சூழல் ஜம்மு காஷ்மீரில் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்க ளின் சுதந்திரம் மற்றும் சுய உரிமைகளுக்காக ஒரு நூற்றாண்டு காலமாக போராடி வருகின்றனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படியும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்தியா குறித்து பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில். “பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாதம் ஒருபோதும்வெற்றியடையாது. பாகிஸ்தானின் தன் தீவிர வாத செயல்பாடுகளுக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அந்நாட்டால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை விடுவிப்பதுதான் எங்களுக்கு இடையே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை.

பாகிஸ்தானின் பிரதான ஏற்றுமதி அதன் தீவிரவாதம்தான். அந்நாட்டின் ஜிடிபியை அதன் தீவிரவாத செயல்பாடுகளாலேயே அளவிட முடியும். பல நாடுகள், தங்கள் சூழ்நிலை காரணமாக பின்தங்கி இருக்கின்றன. ஆனால், சில நாடுகள் பேரழிவை ஏற்படும் விஷயங்களை தெரிந்தே தேர்வு செய்கின்றன. பாகிஸ்தான் அதற்கு ஒரு உதாரணம். பாகிஸ்தான் பிறருக்குச் செய்யும் தீமைகளின் வினை, இறுதியில் அந்நாட்டையே தாக்குகிறது. பாகிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அதன் கர்மாவே காரணம்” என்றார்

x