வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!


வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை 30 ரூபாய் குறைந்துள்ளது.

வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் தவிர வர்த்தக பயன்பாட்டுக்காக 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை உணவகங்கள், சாலையோர கடைகள் போன்றவற்றில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் மாதத்தில் முதல் நாளில் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து நிர்ணயம் செய்கிறது. அதன்படி ஏப்ரல் மாதம் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விலையில் 30 ரூபாய் 50 காசுகள் குறைக்கப் பட்டுள்ளது.

நேற்று வரை 1960.50 பைசாவாக இருந்த சிலிண்டரின் விலை இன்று 30.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1930 ரூபாயாக உள்ளது. சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிக ரீதியாக அதனை பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

x