கம்யூனிஸ்டுகள் கடவுளை நம்புவதில்லை; அவர்களுக்கு நாடு முக்கியமில்லை - ம.பி முதல்வர் மோகன் யாதவ் பேச்சு


பிவானி: கம்யூனிஸ்டுகள் கடவுளையோ மதத்தையோ நம்புவதில்லை என்றும், அவர்களின் சித்தாந்தம் தேசவிரோதிகளைப் போன்றது என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.

ஹரியாணா மாநிலம் பிவானியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “இந்தத் தொகுதியில் எங்கள் எதிரி சிபிஎம் வேட்பாளராக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கம்யூனிஸ்டுகள் கடவுளையோ மதத்தையோ நம்புவதில்லை, அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. அவர்களின் சித்தாந்தம் தேசவிரோதிகளைப் போன்றது” என்று அவர் கூறினார்.

ஹரியாணா சட்டமன்றத்திற்கு அக்டோபர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக சிபிஎம் கட்சிக்கு காங்கிரஸ் கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. சிபிஎம் கட்சியின் பிவானி மாவட்டச் செயலாளரும், மாநிலக் குழு உறுப்பினருமான ஓம் பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பிவானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கன்ஷியாம் சரப் போட்டியிடுகிறார்.

x